Aries - Mesha Rasi (மேஷ ராசி )- Ashwini, Bharani, Krittika - 1st Pada
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கான பொது பலன், குண நலம், பொருளாதாரம், திருமணம், வேலை வாய்ப்பு, அதிர்ஷ்டம் பற்றி அறிந்துகொள்வோம்.
அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்காரர்கள் என கருதப்படுவார்கள். மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும், அழகிய நீண்ட புருவமும், அழகான கண்களும் கொண்டவர்கள். எதையும் நன்கு கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள்.
நீண்ட ஆயுள், தெய்வபக்தி, இரக்க குணம் கொண்டவர்கள். உங்கள் ராசிநாதன் அக்னிக்காரன் என்பதால் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக இறங்குவீர்கள். பக்கத் துணை இல்லாமல் நீங்களே சாதிக்க நினைக்கிறீர்கள் அதற்குரிய வேகமும் ஆற்றலும் இருக்கும். நினைத்ததை உடனே செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள்.
உங்களுக்கு சுய அறிவும் சொந்த மூளையும், முகத்தை கவர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திறமையும் இருக்கும். உங்களால் புதிய புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முடியும். அதன்மூலம் புதியதை உங்களால் தோற்றுவிக்க முடியும், என்றாலும் சில நேரம் ஆத்திரத்தாலும், படபடப்பாலும் உங்கள் முயற்சிகளில் வெற்றிகளை உங்களால் எட்ட முடியாமல் போய்விடும். எனவே, எந்தவித முயற்சியையும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இவர்கள் சாதுரியம் கொண்டவர்கள். தான் சொல்லும் சொல்லை சரியானதாக வாதிடுவர், அதிலும் இவர் காரியவாதிகள் என்பதால் வாக்குத் திறமையால் திறன் படி தான் செய்து தவறை மறைத்து விடுவார்கள்.
Characteristics
இவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள், தைரியமானவர்கள், அவசர புத்தி க்காரர்கள், சற்று அதிகமாகவே இருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் அன்றி மற்றவரின் ஆலோசனையை பெற விரும்பமாட்டார்கள். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படியே செயல்படுவார்கள். வீண் பழி சொற்களுக்கு செவி சாய்க்கமாட்டார்கள். வெகுளியாக காணப்படும் இவர் இதையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுங்கள்.
தன்னிடம் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பம் ஏற்பட்டாலும் பிரதிபலன் பாராமல் உதவுவார்கள். தன்னுடைய கௌரவத்திற்கு எவ்வித களங்கம் ஏற்படாமல் இருக்க பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். இவர்களின் மனம் எப்போதும் ஏதோ ஒன்றை சிந்தித்துக் கொண்டே இருக்கும். அதை உடனடியாக நிறைவேற்ற ஆசைபடுவார்கள். மற்றவர்களை அடக்கி ஆளும் அதன்மூலம் காரியத்தை செய்து கொள்வதிலும் ஆர்வம் கொண்டவர்கள். எந்தவித இடையூறும் பொறுமையுடன் தாங்கிக் அதை முடித்துவிடுவார்கள்.
கவலைகளை உடனுக்குடன் மறந்துவிடும் ஆற்றலும், நல்ல திறமையும் இவர்களிடத்தில் காணப்பட்டாலும், இவருடைய அகங்கார குணமும் இவரை நேசிப்பவரை கூட வெறுக்கும் படி செய்துவிடும். திடீரென மன அமைதி இழந்து விடுவார்கள்.
Marriage
மேஷராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இவர்களுக்கு நல்ல தாய் தந்தையை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் அதிகமாக இருக்கும். நல்ல மணவாழ்க்கை அமையும். குடும்ப வாழ்வு ஒரே சீராக இருக்கும்.
கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள் குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ் கௌரவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்ப்பவர் ஆகவும், தாய் தந்தையை ஆதரிப்பவர்களாகவும் பெரியோர்களின் சொல் கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் காணப்படுவார்கள்.

Job
இவர்கள் சலிக்காமல், சுயநலம், பிரதிபலன் எதிர்பாராமல் பரந்த நோக்கத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். ஊதியத்தை பற்றி அதிகம் கவலைப் படாமல் தான் எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றிகளை பெறுவார்கள். உழைப்பையும் கடமையையும் பெரிதாக கருதுவதால் பிறர் உதவியின்றி சுயநலத்துடன் பாடுபட்டு வெற்றி கொடியை நாட்டுவார்கள்.
இவர்கள் தொழிலிலும் வேலையிலும் ஆர்வமாக இருப்பார்கள். எப்போதும் வேலை வேலை என உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். செலவுகள் இவர்களுக்கு அதிகம் என்பதால் வரவு செலவுகளை திட்டமிட முடியாது. வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று வாழவேண்டும் என்பது இவர்கள் நினைத்தாலும் அது முடியாமல் போகும். எது எப்படி இருந்தாலும் வாழ்வில் ஏற்படக்கூடிய இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேஷம் ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட எண் (Lucky Numbers): 1, 2, 3, 9, 10, 11, 12.
நிறம்: சிவப்பு.
கிழமை: செவ்வாய்.
கல்: பவளம்.
திசை: தெற்கு.
தெய்வம்: முருகன்.
Also Read:
Rishaba Rasi - ரிஷப ராசிMithuna Rasi - மிதுன ராசி
Kanni Rasi - கன்னி ராசி
Kadagai Rasi - கடக ராசி
0 comments: