Thursday, December 13, 2018

Gemini (Mithuna Rasi), மிதுன ராசி

Gemini - Mithuna Rasi (மிதுன ராசி) - Mirugasirisham 3, 4; Thiruvathira, Punarpoosa - 1, 2, and 3 Pada

Mithuna Rasi Character
General:
மிருகசீரிஷம் பாதம் 3 4, திருவாதிரை, புனர்பூசம், நட்சத்திரத்தில் 1 2 3 பாதம், பிறந்தவர்கள் மிதுன ராசிக்காரர்கள்.

அழகான மீன் போன்ற கண்கள் இருக்கும், உயரமான உடலமைப்பு இருந்தாலும் ஒல்லியாகவே இருப்பார்கள்.

Characteristics
புத்திசாதுரியம், நிர்வாகத் திறமையும், சாதுரியமாக செயல்படும் ஆற்றலும் இருக்கும்.  எதிலும் நிரந்தரமான ஈடுபாடு இருக்காது.  எப்பொழுதும் சுறுசுறுப்பாக சுற்றி வருவார்கள்.  அடிக்கடி மனக்குழப்பம் உண்டாகும். 

 நீண்ட ஆயுள் இருக்கும்.  இவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.  ஒருபோதும் சோம்பலாக காலம் தள்ள மாட்டார்கள்.  ஞாபக சக்தி அதிகமாக இருக்கும்.  உங்களிடம் பழகுபவர்கள் எடை போடுவதில் கெட்டிக்காரர்கள்.  எதையும் யூகித்துக்கொள்வதில் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள்.  நிதானமாக அறிவு ஆற்றல் பெற்ற இவர்கள்; சமயத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக் கொள்வார்கள்.  இவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே இவரை புரிந்துகொள்ள முடியும்.

சற்று குழப்பவாதியாகவே இருந்தாலும், எந்த செயலையும் பொறுப்புடன் செய்து முடிப்பார்கள்.  பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள்.  கோமாளி போல, ஏமாளி போலவும் நடந்து கொண்டாலும் நயமாகப் பேசி தங்கள் காரியத்தை செய்து கொள்பவர்கள்.  இவர்கள் எவ்வளவு எளிதில் நட்பு கொள்கிறாரோ அதே அளவில் தொடர்பை துண்டித்துக் கொள்ளும் தயங்கமாட்டார்கள்.  மாற்றம் என்ற ஒன்றே விரும்புவார்கள்.  அடிக்கடி பயணம் செல்ல விரும்புபவர்கள். 

மற்றவரின் பேச்சுக்களை ஆர்வமுடன் கேட்டாலும் தனக்கு எது என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வார்கள்.  பிறரை கிண்டல்-கேலி செய்வதில் கில்லாடிகள்.  பல்வேறு மனப்பான்மை கொண்ட கூட்டத்திலும், தன்னுடைய பேச்சாற்றலால் மற்றவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்.  சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.  சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதில் கெட்டிக்காரர்கள்.

நல்ல பாசத்துக்காக ஏங்குவார்கள்.  அதற்காக நிறைய செலவுகளை  செய்வார்கள்.  நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள்.  எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருப்பார்கள். 

Marriage
திருமண வாழ்க்கையை பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவே  இருப்பார்கள்.  தனக்கு வாக்கும் வாழ்க்கை துணை அழகும், அந்தஸ்தும் பெற்றவராகவும் இருப்பார்கள்.  நல்ல அழகான கணவன் அல்லது மனைவி அமைவர்.  வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.  மேலும் காதல் வயப்படுவதில்  ஆர்வம் கொண்டவர்கள்.  மற்றும் காதல் திருமணத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.

கணவன்-மனைவியிக்குள் இடை இடையே சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைந்து விடுவார்கள்.  உள்ள பிரச்சினை இருந்தாலும் வெளிபார்வைக்கு ஒற்றுமையாகவே காணப்படுவார்கள்.  தங்களது மனைவி மற்றும் குழந்தையை அதிகம் நேசிப்பார்கள்.  மிதுன ராசி பெண்கள் கணவன் மீது நல்ல பற்றும் மரியாதையும் கொண்டவர்கள்.  எல்லோரிடமும் சகஜமாக பழகும் ஆற்றல் கொண்டவர்கள்.  எப்போதும் எச்சரிக்கையாகவும் நடந்து கொள்வார்கள்.

Job
எந்த தொழிலை செய்தாலும் நீதி, நேர்மையை கடைபிடித்து செய்பவர்கள். பலருக்கு ஆலோசனை கொடுக்கக்கூடிய திறமை இருக்கும்.  ஒரு உத்தியோகத்தில் இருந்தாலும் வேறு ஒரு கூடுதல் தொழில் செயாலாமா என்று நினைப்பார்கள்.

கடின உழைப்பின்றி நாசூக்கான வேலையை தேர்ந்தெடுப்பார்கள்.  வெளிவட்டாரத்தில் தங்களோடயே பேச்சுத் திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதால் எந்த தொழிலும் கஷ்டமில்லாததாகத்தான் இருக்கும்.

இவர்களுக்கு ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் அதிக பிரியமுள்ளவர்கள்.  சுக வாசிகள் என்றே சொல்லலாம்.  நல்ல உழைப்பாளியாக இவர்கள் நல்ல சம்பாத்தியம் பெறுவார்கள்.

பணவரவு தாராளமாக இருந்தாலும், வாழ்க்கை வசதிக்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்குவார்கள்.  வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள ஆடம்பர பொருட்களை வாங்க கடன் வாங்கவும்  தயங்கமாட்டார்கள்.  இதனால் நிறைய கடனும் வட்டியும் செலுத்த நேரிடும்.

பிள்ளைகளால் வீண் தொல்லைகளும், கடன்களும், வம்பு வழக்குகளும் ஏற்படும்.  இவர்கள் தங்களின் அவசர முடிவால் பெற்ற பிள்ளைகள், பெற்றோர், உற்றார், உறவினர் அனைவரையும் இழக்க நேரிடும்.  மற்றவர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடித்தால் உறவுகளை தக்கவைத்து க்கொள்ளலாம்.

வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ நேரிடும்.


மிதுன ராசிக்காரர்களுக்கான 

(Lucky Numbers)

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8, 15. 
நிறம்:  பச்சை மற்றும் வெள்ளை.
கிழமை:  புதன் மற்றும் வெள்ளி.
கல்:  மரகதம்.
திசை:  வடக்கு.
தெய்வம்: விஷ்ணு

Also Read
Mesha Rasi - மேஷ ராசி

2 comments: