Thursday, March 14, 2019

Cancer (Kadagai Rasi), கடக ராசி

Cancer - Kadaga Rasi (கடக ராசி) Punarpoosa 4th Pada; Poosa, Aayila - Padas


Cancer Star Character - Kadaga Rasi Character

General:
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடக ராசிகாரர்கள்.  மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்புத்தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும்.

Characteristics
இந்த ராசி, நண்டு ராசியாக இருப்பதால், நண்டு போன்று சற்று சுமாரான உடலமைப்பேய் கொண்டிருப்பார்கள், கை கால்கள் வலிமையானதாக இருக்கும்.  உடலின் மேல் பாகம் நீண்ட பெரியதாக இருக்கும்.  நல்ல அழகான, இளயமயான உடலமைப்பேய் பெற்றிருப்பார்கள்.  

ஒரு சிலர் குள்ளமாகவும், ஒரு சிலர் சுமாரான உயரம் கொண்டும் இருப்பார்கள்.  வயது என்ற என்ற உடல் பெரிது உருட்னு திரண்ட அங்க அமைப்புடன் காணப்படுவார்கள்.  இவர்களுக்கு கூர்மையான மூக்கு, அழகான உதடுகள், புருவங்கள் இருக்கும்.  பேச்சில் உறுதியிருந்தாலும், மெல்லிய குரலில் பேசுவார்கள்.  சந்திரன் ராசியில் பிறந்தவர், ஆதலால் நல்ல சிந்தனை, எண்ணம் கொண்டவராக இருப்பார்கள்.  வாழ்க்கையில் சந்திரன் போல் மேடு பள்ளமாக, அதாவது அம்மாவாசை-பௌர்ணமி போல் இருப்பார்கள்.  நல்ல ஞாபக சக்தி இருக்கும்.  மகிழ்ச்சியாக வாழ்வார்கள். 

வாழ்வில் உயர்ந்த லட்சியம் கொண்டவர்கள்.  சுறுசுப்பாக செயல்பட்டு எதையும் திறமையாக செய்வார்கள்.  எல்லோரிடமும் சகஜமாக பழகுவார்கள்.  எதையும் தீர ஆல்சோது செய்வார்கள்.  இறக்க குணமும் எழிதில் உணர்ச்சிவாச படும் குணமும் கொண்டவர்.  கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.  இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும், பழகிய பிறகு பிரியவே முடியாது  நம்பியவருக்கு இயலா உதவியும் செய்வார்கள்.  இதனால் அடிக்கடி ஏமாந்து போவார்கள்.  கள்ளம் கபடம் இல்லாமல் வெகுளியாக வெளிப்படையாக பேசுவார்கள்.  பிறர் கருத்துக்கு முக்கியதுவும் கொடுக்கமாட்டார்.  இதனால் பலர் வெறுப்புக்கும் ஆளாவார்.

அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள்.  துக்கங்களையம் வெளிப்படுத்துவார்கள்.  எப்பொழுதும் புகழ் மற்றும் செல்வங்களை தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள்.  அந்த புகழை அடைய எந்த ஒரு எல்லையை தண்டி செல்பவராகவும் இருப்பார்கள்.  அடிக்கடி பொய் பேசியும் குறை கூறிக்கொண்டும் இருப்பார்கள்.  அதே சமயம் முன்னெச்செரிக்கையாகவும் இருப்பார்கள்.  ஓரளவுக்கு கூச்ச ஸ்வபாவமாக இருந்தாலும், அதே சமயம் தைரியசாலியாகவும் இருப்பார்கள்.  அடிக்கடி உணர்ச்சிவசபடுவார்கள்.  யாரையும் தூக்கி எரிந்து பேசுவதில் கெட்டிக்காரர்கள்.  தங்கள் காரியத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

தங்கள் குடும்பத்தை நேசிப்பதிலும் குறிப்பாக, தாய்-தந்தை, தன்னோடைய வீட்டை அதிகம் நேசிப்பார்கள்.  பெரும்பாலும், தங்களோடயே வீடு குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்பார்.  நல்ல ராஜதந்திரமிக்கவர்கள்.  யாரிடத்தில் எப்படி பேசவேண்டும் என்று தெரிட்ந்து, தன்னோடைய காரியத்தை முடித்துக்கொள்வார்கள்.  மற்றவர்களின் விமர்சனங்களை கண்டு பயப்படாதவர்கள்.

கடக ராசிக்காரர்கள் நகைச்சுவையாக பேசுவதிலும் இப்பொருள்பட பேசுவதிலும் கெட்டிக்காரர்கள்.  ஒரு விஷயத்தை மறக்காமல் நினைவில் கொண்டு பேசிவிடுவார்கள்.  எப்பொழுதும் தன்னை முன்னிலை படித்திக்கொள்வதிலும் அதை வெளிக்காட்டிக்கொள்வதிலும் ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள்.  ஒரு காரியத்தை செய்வதற்கு பல முறை யோசித்து செய்வார்கள்.  இவர்களுக்கு வரும் வாழ்க்கை துணை சலிப்பில்லாமல் உழைக்கும் குணம் கொண்டவர்.

எவ்வளவுதான் உழைத்தாலும் கடகராசிக்காரர்கள் குறை கூறிக்கொண்டும், தங்களோடயே அதிகாரத்தை செலுத்திக்கொண்டும் இருப்பார்கள்.  ஆரம்பகால வாழ்க்கை வசதிக்குறைவாக இருந்தாலும், இல்-வாழ்க்கை அமைந்து உச்சகத்துக்கு பஞ்சம் இருக்காது.  சுகமும் துக்கமும் மாறி மாறி வந்தாலும் எதையும் பொருளப்படுத்தாமல் வாழ்வார்கள்.  குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார்கள்.

Love and Marriage
உங்களின் ராசி அதிபதி சந்திரன், சந்திரன் என்றல் குளுர்ச்சியென்று பொருள்.  அதே சமயம், சந்திரன் என்றல் காதல் என்றும் பொருள்.  இந்த ராசிக்காரர்கள் காதல் விஷயத்தில் கில்லாடிகள்.  கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் அளவற்ற அன்பை பொழிவார்கள்.  நல்ல துணை அமைய பெறுவார்கள்.  குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள்.  மன வாழ்க்கையில் பொறுமையும், உண்மையையும், கனிவையும் கடைப்பிடிப்பார்கள்.  தங்கள் பிள்ளைகழை அதிக பாசத்தோடு வளர்ப்பார்கள்.  பிள்ளை மீது மிகவும் பாசம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

Job and Wealth
கடகராசியில் பிறந்தவர்கள் சுகவாசியாகவே வாழவிரும்புவார்கள்.  எந்த விதத்திலும் பணம் சம்பாதிக்கும் திறமை பெற்றவர்கள்.  கையில் பணம் இல்லாமல் இருக்க முடியாது.  சிறுவயதிலிருந்தே சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள்.  கடன் வாங்குவது பிடிக்காத ஒன்றாக இருக்கும்.  பணம் விஷயத்தில் இவர் காராறானவர்கள்.  தேவையில்லாமல் எதையும் செலவு செய்யமாட்டார்கள்.  பணத்தை சேமித்துவைப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.  சேமிப்பு பழக்கம் அதிகம் இருக்கும் இவர்களுக்கு எப்பொழுதும் சிறிது சிறிதாக சேமித்துக்கொண்டே இருப்பார்கள்.  இவர்களில் ஒருசிலர் பங்கு சந்தையில் ஆர்வம் கொண்டவர்கள்.  நேர்மையாகும் பல விஷயங்களில் நடந்து கொள்வார்கள்.

கடகராசிக்காரர்களுக்கு பெண்குழந்தை யோகமே உண்டு.  பிள்ளைகளிடம் கருது வேறுபாடு இருந்துகொண்டே இருக்கும்.  ஒரு சிலர் ஆன் வாரிசுக்காக தத்தெடுத்து வளர்ப்பர்.  எதிலும் சுறுசுறுப்பாக செய்து வெற்றி பெறுவார்கள்.  அடிக்கடி தூர தேசத்திற்கு சென்று பொருள் ஈட்டுவார்.  கலைநுட்பம், வாக்குசாதூரியம், சங்கீதம் அதிகம் பெற்றவர்கள்.

கடகராசிக்காரர்களுக்கான 

(Lucky Numbers)

அதிஷ்ட ஏன்:  1, 2, 3, 9, 10, 11, 12, 18 
நிறம்:  வெள்ளை, சிவப்பு
கிழமை:  திங்கள், வியாழன்
கல்:  முத்து.
திசை:  வடகிழக்கு
தைவம்:  வெங்கடாசலபதி


Also Read
Mesha Rasi - மேஷ ராசி

0 comments: